பழனியை போன்று காரைக்குடியிலும் கோவில் நில மோசடி

பழனி கோவில் சொத்து விற்பனை முறை கேடு போல காரைக்குடியிலும் தேவஸ்தான கோவில் சொத்து முறைகேடாக விற்பனை செய்ய முயற்சியால் பரபரப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரின் மையப்பகுதியில் கம்பி வேலி அமைத்து பாதுகாத்து வந்த இலுப்பக்குடி அருள்மிகு சுயம்பிரகாசேசுவர் கோவில் தேவஸ்தான நிலம் அதிகாரிகள் துணையுடன் போலியான ஆவணங்களுடன் பத்திர பதிவு செய்யப்பட்ட நிலையில் பட்டா மாறுதலுக்கு ஏற்பாடான நிலையில் இடத்தை சுத்தம் செய்யும் பணியால் வெளிச்சத்துக்கு வந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலுப்பக்குடி கிராம மக்கள் புகாரில் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காரைக்குடி வட்டாட்சியர் ராஜா காரைக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் இளையராஜா ஆகியோர் நிலத்தை சுத்தம் செய்யும் பணிகளை நிறுத்தி Jcb வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணிபுரம் குறிச்சிபுறவு பகுதியில் இலுப்பக்குடி சுயம்பிரகாசேசுவரர் கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தார் 9 கோவில்களில் ஒன்றாகும் பரம்பரை அறங்காவலர்களால் சுழற்ச்சி முறையில் நிர்வகிக்கப்படும் இக்கோவிலுக்கு சொந்தமாககாரைக்குடி நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது. 

பல்வேறு பகுதிகளில் க்கிரமிக்கப்படும் , தேவஸ்தான அனுமதி மற்றும் இடவரி செலுத்தியும் குடியிறுப்புகள் உள்ளது தற்போது இரண்டரை ஏக்கர் நிலம் அதிகாரிகள் துணையுடன் போலி ஆவணங்களை கொண்டு பதிவு செய்யப்பட்டு காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பட்டா மாறுததலுக்கு தயாராக உள்ள நிலையில் கிராம மக்கள்வட்டாட்சியர் அலுவலகம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தால்.

இடம் சுத்தம் செய்யும் பணி நிறுத்தம் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் இரு தரப்பையும் அழைத்து காவல் ஆய்வாளர் இளையராஜா பேச்சுவார்த்தை நடத்தினார் அப்போது கோவில் இடம் என புகார் வந்துள்ளதால் நீதிமன்ற உத்தரவு பெற்று வந்து இடத்தை சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Source link