பழனி: தமிழக சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு பிராமண சமாஜம் அறிவித்துள்ளது.
அந்த அமைப்பின் கூட்டம், பழனியில் நேற்று நடந்தது. இதில், ‘ஹிந்து சமய வழிபாடுகள், கோவில் மரபுகள், ஆன்மிக நிறுவனங்களின் சுயாட்சியை மதித்து அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேச முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் பா.ஜ., அங்கம் பெறும் தே.ஜ., கூட்டணிக்கு சட்டசபை தேர்தலில் முழு ஆதரவு அளிப்பது’ என தீர்மானிக்கப்பட்டது.
அந்த அமைப்பின் தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் அறிக்கை: சனாதன தர்மத்திற்கு எதிராகவும், பிராமணிய கொள்கைக்கு எதிராகவும் செயல்படும் கட்சிகளை புறக்கணிப்போம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
