பவழ மல்லி:’வேலை செய்யணும்னு வெறி வேணும்’- சாய் அபயங்கர்| Pavazha Malli: “You need a strong passion to work” – Sai Abhyankar

அல்லு அர்ஜூன் சார் – அட்லீ அண்ணா படம் கம்போசிங் நடக்கிறது. நான் அட்லீ அண்ணாவை பற்றி சொல்லியே ஆகவேண்டும்.

என்னை அவர் முதலில் சந்தித்த போது, இந்தப் படம் ஒப்பந்தமாகவில்லை. நான் ஒரே ஒரு பாட்டை போட்டு காட்டினேன், அதைக் கேட்ட அடுத்த நொடி, என்னுடைய அடுத்த படத்தில் நீ இசையமைக்கிறீயா? என்று கேட்டார்.

எனக்கு தலையே சுத்திவிட்டது. அவர் என் மேல் வைத்த நம்பிக்கையால் தான், எனக்கு என் மேல் நம்பிக்கை இன்னும் அதிகமானது” என்று பேசியிருக்கிறார்.

பவழ மல்லி

பவழ மல்லி

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வரும் ஹேட்டர்ஸை கையாள்வது எப்படி என கேட்கபட்டது. அதற்கு சாய் அபயங்கர், ” ‘காதல் கொண்டேன்’ படத்தில் ஒரு வசனம் வரும், `வெறி வேணும்டா வெறி பயங்கரமாக வேலை செய்யணும்னு வெறி வேணும்’. அது என்னுடைய பெற்றோர்களால், குருவால் கிடைத்திருக்கிறது.

செம்மையாக இசையமைப்பது மட்டும் தான் என்னுடைய வேலை. எதை செய்தாலும் 100 சதவிகித உழைப்போடு செய்ய வேண்டும் என்பது மட்டும் தான் ஆசை.

நெருப்பில் காலை வைத்துவிட்டு எரிகிறது என்றால் அது எரிய தான் செய்யும். ஆனால் அதை எல்லாம் தாண்டி ஜாலியாக வேலையை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.” என்றார்.

Source link