பஸ்தார்: நக்சல் ஒழிப்பு ந டவடிக்கைகளில் முக்கிய முன்னேற்றமாக, சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பிரிவில், 1.61 கோடி

பஸ்தார்: நக்சல் ஒழிப்பு ந டவடிக்கைகளில் முக்கிய முன்னேற்றமாக, சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பிரிவில், 1.61 கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த 51 நக்சல்கள் நேற்று சரணடைந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அரசுக்கு எதிராக கண்மூடித்தனமான வன்முறைகளில் ஈடுபட்டு வந்த நக்சல் அமைப்பினர் பெருமளவு ஒடுக்கப்பட்டுள்ளனர்.

நாட்டை நக்சல் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுவிக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மார்ச் வரை கெடு விதித்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் முக்கிய நக்சல் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து நக்சல் கள் சரணடைவது அதிகரித்துள்ளது.

நக்சல்கள் சரணடைவதை ஊக்குவிக்க ‘புதிய பாதை’ என்ற மறுவாழ்வு திட்டம் முக் கிய பங்காற்றி வருகிறது.

இந்நிலையில், சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் மொத்தம் 1.61 கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த 51 நக்சல்கள், பஸ்தார் ஐ.ஜி., முன்னிலையில் நேற்று சரணடைந்தனர்.

இவர்களில் 34 பேர் பெண்கள். அனைவரும் பிஜப்பூர் மற்றும் சுக்மா மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

ஆயுத கிடங்கு

கண்டுபிடிப்பு

சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்தில் நக்சல்கள் நடமாட்டம் உள்ள மலைப் பகுதிகளில், போலீசார் மற்றும் மாவட்ட நக்சல் ஒழிப்பு படையினர் 36 மணி நேர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஆறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் ஆயுத தயாரிப்பு உபகரணங்கள் அடங்கிய கிடங்குகள் கண்டுபிடித்து அழிக்கப்பட்டன.

Source link