கராச்சி: பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் 16 பேர் உயிரிழந்தனர்.
கராச்சியின் சோல்ஜர் பஜார் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று அந்நாட்டு நேரப்படி அதிகாலை 4:15 மணிக்கு இச்சம்பவம் நடந்தது. தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த இடம் குறுகியதாக இருந்ததால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.2 மாடி கொண்ட கட்டடத்தில் போதிய இடம் இல்லாமல் இருந்ததாகவும் கூறினர்.
இந்த சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
