‘பாஜகவுடன் தவெக கூட்டணி என பேசப்படும் நிலையில் இஃப்தார் நிகழ்வில் பஙகேற்கும் விஜய்!’ – விவரம் என்ன? |“Amid BJP Alliance Buzz, Vijay Set to Participate in Iftar Event – Here’s the Detail”

இந்நிலையில், தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இந்த நிகழ்வை நடத்தவிருக்கின்றனர். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மாவட்டங்களில் இருந்து 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை இந்த நிகழ்வுக்காக தவெகவினர் அழைக்கவிருக்கின்றனர்.

கடந்த முறை தவெக சார்பில் இஃப்தார் நிகழ்வு இராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடத்தப்பட்டிருந்தது. அனுமதிக்கப்பட்டதை விட அதிகம் பேர் கூடி நெருக்கடி ஏற்பட்டதால் இந்த முறை மாமல்லபுரத்தில் இந்நிகழ்வை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். இஃப்தார் நிகழ்வில் விஜய் அரசியல் பேசமாட்டார். ஆனால், இஸ்லாமியர்களுடன் எப்போதும் துணையாக நிற்பேன் என ஓரிரு வரிகள் பேசினாலும் அதன் மூலம் நிறைய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் எனக் கூறுகின்றனர் தவெகவினர்.

Source link