நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதில் முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில் திமுகவின் கணக்கு என்ன, காங்கிரஸ் தனித்து விட்டுள்ள நிலையில் டெல்லியில் எப்படி அரசியல் செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
டெல்லியில் நாளைய தினம் (ஜூலை 20) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் சூழலில், திமுகவின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் தவெக உடன் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியிலும், அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளன. இதனால் மதச்சார்பற்ற அணி என்ற அடையாளம் குறித்து கேள்வி எழுவதுடன், திமுக தனித்து விடப்பட்டிருக்கிறது. இனிமேல் அரசியல் செய்வதற்கு பாஜக உடன் இணைந்தால் மட்டுமே முடியும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கலாகும் மசோதாக்கள்
பாஜக அரசின் மசோதாக்கள் நடப்பு கூட்டத்தொடரில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை ஆகிய இரண்டு மசோதாக்களை மீண்டும் கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளது. ஆதரவு பெறும் திட்டம் அதற்காக திமுக, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற பாஜக முனைப்பு காட்டுகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். திருமாவளவன் வார்னிங் மேலும் சனாதன சக்தியை எதிர்க்கும் வரை தான் திமுக உடன் நட்பு தொடரும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில் எதிர்வரும் மழைக்கால கூட்டத்தொடரை திமுக எம்.பிக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் இல்லாமல் திமுக வெற்றி பெற முடியுமா?
திமுக எம்.பிக்கள் ஆலோசனை
இதுதொடர்பாக கடந்த 16ஆம் தேதி லண்டனில் இருந்த படியே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி எம்.பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கவனிக்கத்தக்கது. திமுகவிற்கு மு.க.ஸ்டாலின் தலைமையேற்ற காலகட்டத்தில் இருந்தே பாஜக எதிர்ப்பில் தீவிரம் காட்டினார். குறிப்பாக 2017ஆம் ஆண்டில் இருந்து சொல்லலாம். இது 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் என அடுத்தடுத்து கைகொடுத்தது. ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் கைகொடுக்கவில்லை.
பாஜக எதிர்ப்பில் பின்வாங்கும் திமுக?
டெல்லிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையிலான போர் என்றனர். அதிமுகவை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்து இயக்குகிறது பாஜக என்றனர். இது எதுவுமே பலனளிக்கவில்லை. களத்திலேயே இல்லாதவர்கள் என்று தவெக தலைவர் விஜய் கூறியது தான் உண்மையானது. ஒரே ஒரு தொகுதியுடன் தமிழகத்தில் பாஜக சுர்ங்கி போனது. தற்போதைய சூழலில் பாஜக எதிர்ப்பை கூர்மைப்படுத்துவதை திமுக குறைத்து கொண்டதாகவே தெரிகிறது. ஏனெனில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, ஜி ராம் ஜி என்ற பெயரில் 120 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம் அமல் உள்ளிட்ட விஷயங்களில் பெரிய அளவில் போராட்டங்களோ, தீவிரமோ காட்டவில்லை.
மாநிலங்களவையில் திமுக எம்.பிக்கள் ஆதரவு தருவார்களா?
மத்தியிலும் ஆட்சியில் இல்லை. மாநிலத்திலும் ஆட்சியில் இல்லை என்ற இக்கட்டான சூழலில் திமுக காணப்படுகிறது. எனவே தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ள மிக கவனமாக காய் நகர்த்த வேண்டியுள்ளது. இந்த சூழலில் தான் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிறது. பாஜக அரசு கொண்டு வரும் மசோதாக்கள் மக்களவையில் எப்படியாவது நிறைவேறி விடுகிறது. மாநிலங்களவையில் தான் சிக்கலே. தற்போது திமுகவிற்கு 8 மாநிலங்களவை எம்.பிக்கள் இருக்கின்றனர். இவர்களின் ஆதரவு என்பது பாஜகவிற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். இல்லையெனில் இவர்கள் வெளிநடப்பு செய்தால் கூட போதும். நேரடியாக பாஜகவை நெருங்கி சென்றால் அது பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தும். இத்தனை ஆண்டுகள் கட்டி காத்த பாஜக எதிர்ப்பு என்ற பிம்பம் உடைந்துவிடும். மேலும் தவெக உள்ளிட்ட கட்சிகள் திமுகவை விமர்சிக்க ஒரு வாய்ப்பாக அமையும். அதுமட்டுமின்றி அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் மதச்சார்பற்ற சக்திகள், சிறுபான்மையினரின் வாக்கு வங்கி ஆகியவை எதிராக திரும்ப அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.இதுபோன்ற கணக்குகளை முன்வைத்து திரை மறைவில் சில காய் நகர்த்தல்களை செய்யக்கூடும். இவை அனைத்தும் எப்படி அரங்கேறப் போகின்றன என நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் தெரிந்துவிடும்.
Source link
