பாட்னா: பீஹாரில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.பீஹாரின்

பாட்னா: பீஹாரில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பீஹாரின்
நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஷீத்லா கோவிலில் சிறப்பு வழிப்பாட்டிற்காக
மக்கள் கூடியிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி
எட்டு பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். இதில் 10 பேர் நிலைமை
கவலைக்கிடமாக உள்ளது.

இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என
அஞ்சப்படுகிறது. உயிரிழந்த அனைவரும் பெண்கள். உள்ளூர் மக்களின் உதவியுடன்,
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு விரைவாகக்
கொண்டு செல்லப்பட்டனர்.

கூட்டத்தைக்
கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என்பது குறித்து
விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Source link