பாட்னா: பீஹாரில் பஸ் மீது சரக்கு வேன் மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயம்

பாட்னா: பீஹாரில் பஸ் மீது சரக்கு வேன் மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயம் அடைந்துள்ளனர்.

பழங்குடியினத்தை சேர்ந்த இவர்கள், ஜார்க்கண்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு சரக்கு வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருந்தனர்.

கதிஹர் மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை 31 ல் எதிரே வந்த பஸ் மீது சரக்கு வாகனம் மோதியது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 25 முதல் 30 பேர் காயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்துக்கு மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

உயிரிழந்தவர்களில் ஆண்களும் , பெண்களும் அடக்கும். பஸ் மீது மோதியதை தொடர்ந்து சரக்கு வேன் தீப்பிடித்து எரிந்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Source link