பங்கு சந்தையில் நேற்று ‘நிப்டி இந்தியா டிபென்ஸ்’ குறியீடு கிட்டத்தட்ட 7 சதவீதம் வரை உயர்ந்தது. குறிப்பாக, வர்த்தகத்தின் இடையே ஜி.ஆர்.எஸ்.இ., நிறுவன பங்குகள் 20 சதவீதம் வரை உயர்ந்து ‘அப்பர் சர்க்யூட்’ என்ற நிலைக்கு சென்றது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறக்கூடும் என்ற சமிக்ஞைகள், ஐரோப்பிய நாடுகளை இந்தியா போன்ற நம்பகமான நாடுகளிடம் பாதுகாப்பு உபகரணங்களை வாங்க துாண்டும் என்ற எதிர்பார்ப்பே காரணமாக கூறப்படுகிறது.
![]() |

