கடலூர்: காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக – பாமக முதன்முறையாக நேரடியாக மோதுகிறது. தமிழக சட்டப்பேரவைக்கு ஏப். 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் நான்குமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய அணிகள் களத்தில் இறங்கியுள்ளன. நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுகின்றன.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளில் 4 தொகுதிகிளில் திமுகவும், 5 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளும் பேட்டியிருகின்றன. இதில் காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
