சென்னை: பாமக வேட்பாளர் பட்டியல் வெளியானது. தர்மபுரியில் அன்புமணி மனைவி சவுமியா போட்டியிடுகிறார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு சேலம் (மேற்கு), தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாசலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோவில் (தனி), கீழ்வேளூர், பெரம்பூர், சேலம் (வடக்கு), அம்பத்தூர் ஆகிய 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 18 தொகுதிகளுடன் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று (மார்ச் 30) 15 பேர் கொண்ட பாமக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைவர் அன்புமணி வெளியிட்டார். அதன் விபரம் பின்வருமாறு:
* பெரம்பூர்- திலகபாமா
* தர்மபுரி- சவுமியா அன்புமணி
* விருத்தாசலம்- தமிழரசி ஆதிமூலம்
* சேலம் மேற்கு- மு.கார்த்தி
* பென்னாகரம்- செல்வம்
* போளூர்- பாஸ்கரன்
* திருப்போரூர்- கே.பாலு
* ஜெயங்கொண்டம்- வைத்தி
* சேலம் வடக்கு- சதாசிவம்
* விக்கிரவாண்டி- சிவக்குமார்
* சோளிங்கர்- சரவணன்
* மயிலாடுதுறை- சித்தமல்லி ஏ.பழனிச்சாமி
* உத்திர மேரூர்- மகேஷ் குமார்
* ரிஷிவந்தியம்- செழியன்
* காட்டுமன்னார்- அன்பு சோழன்
ஏற்கனவே கடந்த 25ம் தேதி 3 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அன்புமணி அறிவித்தார். அதில் கீழ்வேளூர் – ச.வடிவேல் ராவணன் (பாமக பொதுச் செயலாளர்), அம்பத்தூர் – என்.சேகர் (மாநில துணைத் தலைவர் – முன்னாள் நகர் மன்றத் தலைவர்), செஞ்சி – அ.கணேஷ் குமார் (இளைஞரணி தலைவர் – முன்னாள் எம்எல்ஏ) ஆகிய 3 பேரை வேட்பாளர்களாக போட்டியிட உள்ளனர்.
மேலும் தேர்தல் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தினமலர் தேர்தல் களம் பகுதியில் வெளியாகும் செய்திகளை படியுங்கள்.
