பாரா வில்வித்தை: ஷீத்தல் ஜோடி 'தங்கம்'

பாங்காக்: பாரா வில்வித்தையில் இந்தியாவின் ஷீத்தல் தேவி, பாயல் ஜோடி தங்கம் வென்றது.

தாய்லாந்தின் பாங்காக் நகரில், மாற்றுத்திறனாளி நட்சத்திரங்கள் பங்கேற்கும் பாரா உலக வில்வித்தை சீரிஸ் நடக்கிறது. பெண்கள் அணிகளுக்கான ‘காம்பவுண்டு’ பிரிவு பைனலில், இந்தியாவின் ஷீத்தல் தேவி, பாயல் நாக் ஜோடி 150-147 (36-37, 39-36, 37-35, 38-39) என்ற கணக்கில் கஜகஸ்தானின் ஜானத் ஐதிமோவா, ஐசாதா செய்டான் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது.

ஆண்கள் அணிகளுக்கான ‘காம்பவுண்டு’ பிரிவு பைனலில் இந்தியாவின் தோமன் குமார், ஷியாம் சுந்தர் சுவாமி ஜோடி 153-146 (35-35, 39-39, 40-35, 39-37) என்ற கணக்கில் சீனதைபேயின் சுங்-ஹங் வு, ஜியுன்-கெய் யாங் ஜோடியை வீழ்த்தி தங்கத்தை தட்டிச் சென்றது.

கலப்பு அணிகளுக்கான ‘காம்பவுண்டு’ பிரிவு பைனலில் இந்தியாவின் ஷீத்தல் தேவி, தோமன் குமார் ஜோடி 152-143 (38-35, 38-35. 38-36. 38-37) என்ற கணக்கில் ஜப்பானின் அயா ஷினோஹரா, யுயா ஒய் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது.

பெண்கள் அணிகளுக்கான ‘ரிகர்வ்’ பிரிவு 3வது இடத்துக்கான போட்டியில் இந்தியாவின் பாவனா, ராஜ்ஸ்ரீ ஜோடி 6-0 (32-11, 32-28, 29-22) என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலம் கைப்பற்றியது.

Source link