பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காட்டில், மலையாள திரைப்பட பின்னணி பாடகர்கள் சங்கமான ‘சமம்’ மற்றும் ‘ஸ்வரலயா’ கலை அமைப்பின் கூட்டு முயற்சியில், மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் நினைவாக, அவரது சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கோவை — கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், பாலக்காடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அருகே உள்ள வி.டி. பட்டத்திரிப்பாடு நினைவகத்தில், கண்ணுார் பய்யன்னுாரை சேர்ந்த சிற்பி கானாயி உன்னி வடிவமைத்த பத்தடி உயரமுள்ள எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் கண்ணாடி உலோக சிலையை, ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், பாடகர்கள் சித்ரா, சுஜாதா, ஹரிஹரன், உன்னி மேனன், ஸ்ரீநிவாஸ், விஜய் ஜேசுதாஸ், எஸ்.பி.பி. சரண், பல்லவி, மனோ, மது பாலகிருஷ்ணன், சுதீப்குமார், ரவி சங்கர், திரைப்பட நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் உட்பட தென்னிந்தியாவின் முன்னணி கலைஞர்கள் கலந்து கொண்டனர். அதன்பின், ‘சங்கீத மேகம்’ என்ற பெயரில் இசை நிக ழ்ச்சி நடந்தது.
