பாலக்காடு: பாலக்காடு அருகே, செம்பை பார்த்தசாரதி கோவிலில் ஏகாதசி சங்கீத விழா நேற்று நிறைவு பெற்றது. கேரள

பாலக்காடு: பாலக்காடு அருகே, செம்பை பார்த்தசாரதி கோவிலில் ஏகாதசி சங்கீத விழா நேற்று நிறைவு பெற்றது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி செம்பை பார்த்தசாரதி கோவில் மாசி மாத ஏகாதசி திருவிழா கடந்த, 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

நான்கு நாட்கள் சங்கீத விழாவை கடந்த 24ம் தேதி பிரபல இசை கலைஞர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். தொடர்ந்து, இசைக் கலைஞர்களின் சங்கீத ஆராதனை நடைபெற்றன. நிறைவு நாளான நேற்று காலை, தியாகராஜ பாகவதரை நினைவுகூரும் உஞ்ச விருத்தி நடந்தது. தொடர்ந்து, மண்ணூர் ராஜகுமாரனுண்ணி தலைமையில் பஞ்சரத்ன கீர்த்தனை நடந்தது.

அதன்பின், இளம் கலைஞர்களின் சங்கீத ஆராதனை நடைபெற்றது. மாலையில், சென்னை ராமநாதனின் சக்ஸபோன் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, விஜய் ஜேசுதாஸின் இசைக் கச்சேரி நடந்தது. அவருக்கு, விவேக் ராஜா (வயலின்), ஹரி (மிருதங்கம்), கோவை சுரேஷ் (கடம்), ஹரீஷ் (கஜ்ஜிரா), வெள்ளிநேழி ரமேஷ் (முகர்சங்) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர்.

இதையடுத்து, பிரகாஷ் உள்ளியேரியின் ஹார்மோனியம் கச்சேரியும், அனுப், பார்வதி திலீப் ஆகியோரின் வயலின் கச்சேரியுடன் இசை விழா நிறைவு பெற்றது. இன்று, ஆறாட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

Source link