விளாத்திக்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினரான மார்க்கண்டேயன் பாளையங்கோட்டை சிறையில் இருக்கிறார். முதல்வர் ஜோசப் விஜய்யை மிரட்டும் தொனியில் பேசியதாக கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. இவரை சமீபத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி சந்தித்து இருந்தார். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் , சிறையில் உள்ள மார்கண்டேயனை சந்தித்துள்ளார்.
சமீபத்தில் முதல்வர் விஜய்யை அவதூறாக பேசியதாக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவருடைய இந்த கைதுக்கு திமுகவினர் கடுமையான கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட அன்றே, ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன், முதல்வர் ஜோசப் விஜய்யை மிரட்டு வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து அவரிடம் பத்து மணி நேரத்திற்கும் மேலாகவும் விசாரணை நடந்ததை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்ப நிலையில், பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயன் அடைக்கப்பட்டார். அவருடைய இந்த கைதுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் துவங்கி திமுகவினர் பலரும் கடுமையான கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் சிறையில் இருந்த மார்க்கண்டேயன் சமீபத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் எம்பி கனிமொழி சந்தித்து பேசினார்.
இந்நிலையில் இன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், எம்எல்ஏ மார்க்கண்டேயனை சந்தித்துள்ளார். கடந்த 20 ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்ட நிலையில், திமுகவை சார்ந்த பலரும் அவரை சந்தித்து பேசி வருகின்றனர். இப்படியான நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், மார்க்கண்டேயனை சந்திப்பதற்காக பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு வருகை தந்தார். தொடர்ந்து விளாத்திக்குளம் எல்எல்ஏவை சந்தித்து பேசினார்.
இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எதிர்பாராத விதமாக உதயநிதி ஸ்டாலின், பாளையங்கோட்டை சிறைச்சாலைக்கு உதயநிதி ஸ்டாலின் வருகை தந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முன்னதாக திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, பாளையங்கோட்டையில் உள்ள மார்க்கண்டேயனை சந்தித்து பேசினார். அவருடன் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.
இந்த சந்திப்புக்கு பின்பாக கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், பாளையங்கோட்டை சிறைச்சாலை திமுகவினருக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. ஏனென்றால் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று கலைஞர் கருணாநிதி இங்கு தான் அடைக்கப்பட்டார். எனவே இந்த சிறைச்சாலையில் இருப்பதை திமுகவினர் பெருமையாகவே கருதுவார்கள். இது போன்ற அடக்குமுறைகளுக்கு திமுகவினர் ஒருபோதும் அஞ்ச மாட்டார்கள் என திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின், பாளையங்கோட்டை சிறைச்சாலையில் எம்எல்ஏ மார்க்கண்டேயனை சந்தித்துள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் ஜாமீன் விசாரணைக்காக நீதிமன்றம் வந்திருந்த எம்எல்ஏ மார்க்கண்டேயன், எத்தனை நாள் உள்ளே இருக்கிறேமோ, அவ்வளவு சீக்கிரம் நம்முடைய ஆட்சி வரும். எல்லாரும் சந்தோசமாக இருங்க. எந்த பிரச்சனையும் இல்லையென நம்பிக்கையுடன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
