பா.ஜ.,வில் செயல்படாத சக்திகேந்திர பொறுப்பாளர்கள் மாவட்ட, மண்டல நிர்வாகிகள் மீது அதிருப்தி

மதுரை: தமிழக பா.ஜ.,வில் மாவட்ட, மண்டல நிர்வாகிகளின் கண்காணிப்பின்மையால் சக்தி கேந்திரா அமைப்பினர் சரியாக இயங்காதது குறித்து நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழக பா.ஜ.,வில் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகளுக்கு கீழ் ஓட்டுச் சாவடிகளில் கிளை அமைப்பு நிர்வாகிகள் உள்ளனர். இவற்றில் 3 ஓட்டுச்சாவடிகளுக்கு ஒரு சக்திகேந்திர பொறுப்பாளர் செயல்படுகிறார். இவ்வகையில் ஒரு தொகுதி யில் 300 ஓட்டுச்சாவடிகள் இருந்தால் அங்கு 100 சக்திகேந்திர பொறுப் பாளர்கள் உள்ளனர்.

ஓட்டுச்சாவடிகளில் கிளை அமைப்பினரை துாண்டி செயல்பட வைப்பது, கண்காணிப்பது என செயல்படுவர். அவ்வகை யில் பொது மக்களை ஓட்டுச்சாவடிக்கு கொண்டு சேர்க்கும் இடத்தில் இவர்கள் உள்ளனர். எனவே இவர்களுக்கு கட்சி யின் இயக்கத்தில் முக்கிய பங்கு உள்ளது.

இவர்களை எல்லா பகுதிகளிலும் மண்டல, மாவட்ட நிர்வாகிகளே நியமித்துள்ளனர். அத்துடன் சரி. மாநில அளவில் தலைமையகத்தில் இருந்து சக்திகேந்திர பொறுப்பாளர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டால், அவர்கள் பெரும்பாலோர் போனை எடுப்பதில்லை. எடுத்தாலும் தாங்கள் என்ன பொறுப்பில் இருக்கிறோம், எப்போது, யார் நியமித்தார்கள் என்று கூட தெரிவதில்லை. அந்தளவு மண்டல, மாவட்ட நிர்வாகிகள் தங்களுக்கு வேண்டியவர்கள், உறவினர்கள், செயல்படாமல் உள்ளவர்களை நியமித்துள்ளனர்.

சரிவர செயல்படாததால், சக்திகேந்திர பொறுப்பாளர் பட்டியல் மாநில அளவில் 5 முறைக்கு மேல் மாற்றப்பட்டுள்ளது. மேலும் இவர்களை வைத்து ( மாநில அளவில் தொகுதிக்கு 100 பேர் என்றாலும் 234 தொகுதியிலும் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருவர்) உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் சேலத்தில் மாநாடு நடத்த முயன்றனர்.

இதற்கான ஏற்பாடுகளில் இறங்கியபோது சக்திகேந்திர பொறுப்பாளர்களில் பலரின் செயல்பாடுகள் சரியில்லை என்று அறிந்து மாநாட்டையே ரத்து செய்துள்ளனர். சமீபத்தில் சக்திகேந்திர பொறுப்பாளர்கள் குறித்து ஆய்வு செய்வதற்காகவே மாவட்ட தலைவர்கள் மட்டும் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் மதுரையில் நடந்துள்ளது.

சக்திகேந்திர பொறுப்பாளரை செயல்பட வைப்பதன் மூலமே பா.ஜ., இந்த தேர்தலில் சிறப்பாக செயல்பட முடியும் என கட்சியினரே புலம்புகின்றனர்.

Source link