பிக் பாஸ்: பாண்டியை அடுத்து உடல்நலக் குறைவால் வெளியேறிய ராகவ்

வெளியேறிய ராகவ்: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசனில் கலந்து கொண்ட நடிகர் ராகவ் தனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி அந்த ஷோவில் இருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். ஒரு போட்டியாளர் உடல்நலக் குறைவால் வெளியே சென்றது இந்த சீசனில் இது இரண்டாவது முறை ஆகும்.

நிகழ்ச்சி துவங்கிய முதல் நாளே பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற போட்டியாளர்களில் ஒருவர் ராகவ். இந்த நிகழ்ச்சி மூலம் தனது எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் கலந்து கொண்டார்.

அவரை மக்களுக்கும் பிடித்திருந்தது. ஆனால் உடல்நலம் ஒத்துழைக்காத காரணத்தால் இனியும் இந்த நிகழ்ச்சியில் தன்னால் தொடர முடியாது என்று பிக் பாஸிடம் தெரிவித்துவிட்டு கிளம்பியிருக்கிறார்.

42 நாட்கள் அந்த வீட்டில் தங்கியிருந்த ராகவ் பிக் பாஸ் பார்வையாளர்களின் அன்பை அதிக அளவில் பெற்ற போட்டியாளர்களில் ஒருவர் ஆவார். ராகவ் கிளம்பியிருப்பதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்படும் போட்டியாளர்களின் உடல்நலம் குறித்து பேசப்படுகிறது.

பாண்டியின் கண்ணீர்: இந்த சீசன் துவங்கிய மூன்றாவது நாளே நடிகர் பிளாக் பாண்டி உடல்நல பாதிப்பால் வெளியே சென்றார். தன்னுடைய பல வருட போராட்டங்களுக்கு இந்த பிக் பாஸ் மூலம் விடிவுகாலம் பிறக்கும் என்று நம்பி தான் கனவோடு வந்தார் அவர்.

ஆனால் வந்த இடத்தில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர்கள் வந்து பரிசோதனை செய்தார்கள். பாண்டி இனியும் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்தால் அது அவருக்கு ஆபத்தாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறியதால் அவரை கிளம்பச் சொன்னார்கள்.

தன் கனவு இப்படி நொறுங்கிவிட்டதை பார்த்த பாண்டி கண்ணீர் விட்டார், பிக் பாஸிடம் கெஞ்சினார். நான் வேண்டுமானால் இந்த வீட்டில் இருந்தே ஒரு வாரம் சிகிச்சை பெறுகிறேனே என்று கேட்டார். ஆனால் எந்த விஷயத்தில் வேண்டுமானாலும் ரிஸ்க் எடுக்கலாம், உடல்நலனில் ரிஸ்க் எடுக்க முடியாது என்பதால் பாண்டி அழுதும் கூட அவரின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

உடல்நல பரிசோதனை: இனி வரும் சீசன்களில் போட்டியாளர்களை தேர்வு செய்யும்போது அவர்களால் அந்த வீட்டில் 100 நாட்கள் தங்கி டாஸ்க் செய்ய முடியுமா என உடல்நல பரிசோதனை நடத்த வேண்டும். அவ்வாறு செய்தால் கெரியரை மேம்படுத்தும் ஆசையில் வந்து பாதியிலே கனத்த இதயத்துடன் போட்டியாளர்கள் கிளம்பிச் செல்ல வேண்டியது இல்லை.

ராகவால் தொடர்ந்து தங்க முடியாமல் சென்றதை அடுத்து அவருக்கு பதில் ஒயில்டு கார்டு மூலம் ஒரு போட்டியாளரை நிச்சயம் அழைத்து வருவார்கள். இந்நிலையில் இந்த வாரம் மக்களின் வாக்குகள் அடிப்படையில் சாந்தினி தமிழரசன் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

சாந்தினி, வாசன்: சாந்தினியை கடந்த வாரமே வெளியேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எலிமினேஷன் இல்லா வாரமாக அது அறிவிக்கப்பட்டதால் தப்பித்தார்.மக்களின் ஆதரவு சாந்தினிக்கு சுத்தமாக இல்லாததை அறிந்த பிக் பாஸ் அவரை இந்த வாரம் வெளியேற்றிவிட்டார்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

இதற்கிடையே இந்த வாரம் கொடுக்கப்பட்ட டைமண்ட் ஹைஸ்ட் டாஸ்க்கில் வெற்றி பெற்ற டிடிஎஃப் வாசனுக்கு எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் கொடுக்கப்பட்டது. நாளுக்கு நாள் வாசனுக்கு ஆதரவு அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link