பிக் பாஸ் முத்தழகி, சாதிகாவை இடுப்பில் வைத்து ஆடிய டிடிஎஃப் வாசன்: ஜேசனிடம் செருப்பை காட்டிய தன்யா

வாசன் டான்ஸ்: இந்த வாரம் பிக் பாஸ் போட்டியாளர்களில் பாதிப் பேர் குயிக் கன் கவ்பாய்ஸாகவும், மீதமுள்ளவர்கள் மைனிங் மாஃபியாவாகவும் இருக்கிறார்கள். இந்த இரு பிரிவினரும் போட்டி போட்டுக் கொண்டு டாஸ்க் செய்து வருகிறார்கள். அதில் கவ்பாஸ்ஸுக்கு தான் தொடர்ந்து வெற்றி கிடைத்து வருகிறது. அதனால் கவ்பாய்ஸ் எல்லாம் குஷியாகவும், மாஃபியா ஆட்கள் கடுப்பிலும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் சக அணியை சேர்ந்த முத்தழகி மற்றும் சாதிகாவை தன் இடுப்பில் வைத்துக் கொண்டு டிடிஎஃப் வாசன் ஒரு டான்ஸ் ஆடினார் பார்க்கணும். தம்பி, நீங்கள் ரொம்ப ஸ்டிராங் தான். ஒரே சமயத்தில் இரண்டு பேரை தூக்கிவிட்டீர்களே என பாராட்டியவர்கள் உண்டு. எங்க தலைவன் எப்படினு பார்த்தீங்கள்ல என டிடிஎஃப் வாசன் ரசிகர்கள் சந்தோஷப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் சிலரோ, இருந்தால் டிடிஎஃப் வாசன் மாதிரி இருக்கணும். பிக் பாஸ் வீட்டில் ஜாலியாக இருக்கிறார். ஒரு விதிமுறையையும் பின்பற்றுவது இல்லை. யார் என்ன சொன்னாலும் கேட்பது இல்லை. நினைத்ததை செய்கிறார் என்கிறார்கள். டிடிஎஃப் வாசன் இப்படி நினைத்ததை செய்வதால் தான் அவரை ஆதரவாளர்கள் கொண்டாடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளவும்.

டிடிஎஃப் வாசன் மனைவி: முன்னதாக ரெமோவாக நடித்ததற்கே கேமரா முன்பு வந்து நின்று இது நடிப்பு தான்டி, விட்டுட்டுப் போயிடாத என மனைவியிடம் கெஞ்சினார் வாசன். அது க்யூட்டாக இருந்தது. இந்நிலையில் இப்படி இரண்டு பெண்களை தூக்கிக் கொண்டு டான்ஸ் ஆடியதை பார்த்துவிட்டு வாசன் மனைவி எப்படி எல்லாம் ஃபீல் செய்தாரோ. இருக்கு வீட்டுக்கு திரும்பிச் சென்ற பிறகு வாசனுக்கு இருக்கு என்கிறார்கள் பார்வையாளர்கள்.

ஒயில்டு கார்டு வாய்ப்பை ஏற்று அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதில் இருந்து மிஸ் யூ மாமா என அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் ஃபீல் செய்து கொண்டிருக்கிறார் டிடிஎஃப் வாசனின் அன்பு மனைவி. அதை பார்த்து நொந்து கொண்டிருக்கிறார்கள் 90ஸ் கிட்ஸ். எல்லாம் வழக்கமான புலம்பல் தான். நேற்று பிறந்த 2கே கிட்டான வாசனுக்கு கல்யாணமாகிவிட்டது, எங்களுக்கு ஆகவில்லையே என்று தான் புலம்புகிறார்கள்.

அக்ஷிதாவுக்கு பிரச்சனை: இதற்கிடையே துவைத்து காயப் போட்ட தன் துணியை எடுத்து வீசியது யாரென்று வாசன் விசாரித்தபோது கத்திய அக்ஷிதாவை ஓரமாக போமா என தள்ளினார். அதற்கு அக்ஷிதா கத்தியதை பார்த்த வாசன் ஆதரவாளர்களோ, சும்மா woman card யூஸ் செய்து டிராமா போட வேண்டாம் என்கிறார்கள். மேலும் வாசனை சமையல் பாத்திரத்தால் அடித்த அக்ஷிதாவை பிக் பாஸ் தொகுப்பாளரான விஜய் சேதுபதி கண்டித்து ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

வாசனுக்கு கோபம் வந்தால் எப்படி கத்துவாரோ, அதே மாதிரி அக்ஷிதாவை கத்தி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். இதற்கிடையே மைனிங் மாஃபியா டீமை காலி செய்வது வேறு யாரும் அல்ல அந்த வளர்ந்து கெட்டவரான ஜேசன் தான். சொந்த அணியையே சிதைக்கிறார் என்கிற புகார் எழுந்திருக்கிறது.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

இந்நிலையில் எல்லா டாஸ்க்கிலும் நான் விளையாட வேண்டும் என தன்யா சொல்றாங்க என்றார் ஜேசன். அதை கேட்ட தன்யா கடுப்பாகி நான் உங்களிடம் அப்படி சொன்னேனா என கத்த, கத்தினா கத்திக்கேட்டே தான் இருக்கணும் என அவர் சொன்னார். வேண்டாம் நான் அசிங்கமா சொல்லிடுவேன் என்ற தன்யாவோ ப்ரோ நீ இது கூட கிடையாது என்று ஷூவை எடுத்து காண்பித்துவிட்டார். ஆக, இந்த வார இறுதியில் அடிதடி பஞ்சாயத்து மட்டும் அல்ல ஷூ பஞ்சாயத்தும் இருக்கிறது.

Source link