பிக் பாஸ் பங்களா ஷோ: பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபலமாக உள்ளது. இந்நிலையில் 10 ஆண்டுகள் கழித்து பெங்காலி மொழியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் நடத்தவிருக்கிறார்கள். 2013ம் ஆண்டு பிக் பாஸ் பங்களா நிகழ்ச்சியின் முதல் சீசன் நடந்தது. அதை பிரபல நடிகரான மிதுன் சக்ரபர்த்தி தொகுத்து வழங்கினார். அதன் பிறகு 3 ஆண்டுகள் கழித்து 2016ம் ஆண்டு நடந்த இரண்டாவது சீசனை பெங்காலி நடிகர் ஜீத் தொகுத்து வழங்கினார். 2வது சீசனுக்கு பிறகு அந்த மொழியில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு மூன்றாவது சீசனை நடத்தவிருக்கிறார்கள். இம்முறை நடிகர்கள் அல்ல மாறாக கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலமான தாதா சவுரவ் கங்குலியை தொகுப்பாளராக தேர்வு செய்திருக்கிறார்கள். தனித்தனியாக ஒவ்வொரு மொழி பிக் பாஸ் நிகழ்ச்சிகள் துவங்கும். ஆனால் இந்த முறையோ அனைத்து மொழி பிக் பாஸ் நிகழ்ச்சிகளையும் ஒரே சமயத்தில் அதாவது செப்டம்பர் மாதமே துவங்க முடிவு செய்திருக்கிறார்கள்.
தாதா வருகிறார்: பிக் பாஸ் நிகழ்ச்சியை இந்தியில் சல்மான் கான், தமிழில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தெலுங்கில் நாகர்ஜுனா, கன்னடத்தில் கிச்சா சுதீப், மலையாளத்தில் மோகன்லால் ஆகியோரும் தொகுத்து வழங்கவிருக்கிறார்கள். மற்ற மொழிகளில் அந்தந்த மாநில நடிகரை வைத்து தொகுத்து வழங்க வைக்கும் நிலையில் பெங்காலியில் மட்டும் முன்னாள் கிரிக்கெட் வீரரை தொகுப்பாளராக்கியிருக்கிறார்கள். சவுரவ் கங்குலி எப்படி தொகுத்து வழங்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு தற்போதே ஏற்பட்டிருக்கிறது.
சூடுபிடித்த பிக் பாஸ்: சும்மாவே ஒரு மொழி பிக் பாஸை இன்னொரு மொழி பிக் பாஸுடன் ஒப்பிடுவார்கள் பார்வையாளர்கள். இந்நிலையில் அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகப் போவதால் ஒப்பீடு நிச்சயம் அதிகமாக இருக்கும். எந்த டாஸ்க் எந்த மொழியில் இருந்து எடுக்கப்படுகிறது. எந்த மொழி பிக் பாஸில் காதல் டிராக் நன்றாக இருக்கிறது. எங்கு மிக்சர் பார்ட்டிகள் அதிகம் இருக்கிறார்கள். எந்த மொழி தொகுப்பாளர் தீயாக மாறி போட்டியாளர்களை லெஃப்ட் அன்ட் ரைட் விடுகிறார். எந்த மொழியில் இந்த சீசனில் முதல் ரெட் கார்டு கொடுக்கப்படப் போகிறது. கடந்த சீசனில் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு ரெட் கார்டு கொடுத்தது மாதிரி தற்போது வேறு எந்த மொழியிலாவது டபுள் எவிக்ஷன் அல்லது ட்ரிபிள் எவிக்ஷன் இருக்குமா என தற்போதே பல கேள்விகள், எதிர்பார்ப்புகள் என்று பிக் பாஸ் பார்வையாளர்கள் பரபரப்பாகிவிட்டார்கள்.
காமன்மேன் போட்டியாளர்கள்: தமிழில் இம்முறை பிக் பாஸ்-தி காமன்மேன் நிகழ்ச்சியை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள். பொதுமக்கள் போட்டியளராகும் அந்த காமன் மேன் ஷோ தான் செப்டம்பரில் துவங்கும் என்று கூறப்பட்டது. மேலும் அதை பிக் பாஸ் டைட்டில் வின்னர்களில் ஒருவரான முத்துக்குமரன் அல்லது மாயா கிருஷ்ணன் அல்லது இரண்டு பேருமே தொகுத்து வழங்குவார்கள் என்று தகவல் வெளியானது.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
காமன்மேன் நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்படுபவர்கள் பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றார்கள். 8வது சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்த விஜய் சேதுபதிக்கு இது மூன்றாவது சீசன் என்பது குறிப்பிடத்தக்கது.
Source link
