புதுடில்லி::நாட்டின் முக்கியமான எட்டு கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சி, பிப்., மாதத்தில் 2.30 சதவீதம் குறைந்ததாக மத்திய அரசின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் அது 3.40 சதவீதமாக இருந்தது.
முக்கிய துறைகளின் வளர்ச்சி, கடந்த ஜனவரியில் 4 சதவீதமாக காணப்பட்டது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள் உற்பத்தி ஆகிய துறைகள் பிப்ரவரியில் எதிர்மறை வளர்ச்சி கண்டன.
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், ஸ்டீல், சிமென்ட், மின்சாரம் ஆகியவை முக்கிய கட்டமைப் பு துறைகளாக உள்ளன.
