சென்னை:பிப்ரவரி மாத இருசக்கர வாகன விற்பனை, 28 சதவீதம் உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அதாவது, கடந்த ஆண்டு பிப்ரவரியில், 13.84 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையான நிலையில், கடந்த பிப்ரவரியில் 17.74 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஹீரோ நிறுவனம், கடந்த மாத விற்பனையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள ஹோண்டா மற்றும் ஹீரோ நிறுவனங்கள் இடையே, வெறும் 3,778 வாகனங்கள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. அதிகபட்சமாக ஹீரோ நிறுவனத்தின் விற்பனை, 44.7 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஏற்றுமதியில் ஹீரோ நிறுவனம், அதிகபட்சமாக 34 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த மாதத்தில் இந்நிறுவனம், 41,248 வாகனங்கள் ஏற்றுமதி செய்துள்ளது. பஜாஜ் நிறுவனம், 26 சதவீதமும், சுசூகி நிறுவனம் 38 சதவீதமும் ஏற்றுமதி வளர்ச்சி கண்டுள்ளன.
