புதுடில்லி: நாட்டின் தயாரிப்பு துறை நிறுவனங்களின் உற்பத்தி வளர்ச்சி, பிப்ரவரி மாதத்தில் மூன்று மாதங்களில் இல்லாத உயர்வு கண்டிருப்பதாக எச்.எஸ்.பி.சி., வங்கி வெளியிட்டுள்ள பி.எம்.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொழிற்சாலை உற்பத்தி அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ் அண்டு பி., நிறுவனத்தின் உதவியுடன் எச்.எஸ்.பி.சி., வங்கி மாதந்தோறும் இந்த அறிக்கையை வெளியிடுகிறது.
![]() |
இந்த மாதத்துக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தயாரிப்பு துறை நிறுவனங்களின் உற்பத்தி வளர்ச்சியை குறிக்கும் எச்.எஸ்.பி.சி., இந்தியா பி.எம்.ஐ., குறியீடு, கடந்த ஜனவரியில் 58,40 புள்ளிகளாக இருந்த நிலையில், பிப்ரவரியில் 59.30 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
இந்த குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் வளர்ச்சியையும்; குறைவாக இருந்தால் சரிவையும் குறிக்கும். உற்பத்தி அதிகரிப்பு மற்றும் அதிக ஆர்டர்கள் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த செப்., மாதத்துக்கு பின், இது அதிகபட்ச உயர்வாகும்.
தேவை வலுவடைந்ததும், உள்நாட்டு சுற்றுலா, சந்தைப்படுத்தல் வெற்றி, பொருட்கள் ஆர்டருக்கான விசாரணை அதிகரிப்பு ஆகியவை, கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்தது.

