பிரக்ஞானந்தா வெற்றி துவக்கம் * கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில்…

பாப்ஹாஸ்: கேண்டிடேட்ஸ் தொடரை வெற்றியுடன் துவக்கினார் பிரக்ஞானந்தா.

மேற்காசியாவில் உள்ள சைப்ரஸ் தீவில் ‘கேண்டிடேட்ஸ்’ செஸ் தொடர் (ஆண்கள், பெண்கள்) துவங்கியது. ஆண்கள் பிரிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 8 பேர் பங்கேற்கின்றனர். இதில் வெற்றி பெறும் வீரர், உலக சாம்பியன் பட்டத்திற்காக, நடப்பு சாம்பியன், இந்தியாவின் குகேஷை எதிர்த்து களமிறங்கலாம்.

முதல் சுற்றில் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரியை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, துவக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்டார். 51 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் பேபியானோ, சக வீரர் நகமுராவை வீழ்த்தினார்.

இரண்டு சுற்று முடிவில் பிரக்ஞானந்தா, பேபியானோ, ஜாவோகிர் (உஸ்பெகிஸ்தான்) தலா 1.5 புள்ளியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டனர்.

திவ்யா ‘டிரா’

பெண்கள் பிரிவில் ஹம்பி (இந்தியா), போர் அச்சம் காரணமாக விலகினார். இந்தியாவின் திவ்யா, வைஷாலி உட்பட 8 பேர் பங்கேற்கின்றனர். இதில் வெல்லும் வீராங்கனை, நடப்பு உலக சாம்பியன், சீனாவின் ஜு வென்ஜுனுடன் மோதுவார். முதல் சுற்றில் திவ்யா, உக்ரைவின் முஜிசக் மோதிய போட்டி ‘டிரா’ ஆனது. வைஷாலி, கஜகஸ்தானின் பிபிசாராவுடன் ‘டிரா’ செய்தார்.

Source link