பிரதமர் மோடியை தாக்க முயற்சித்ததாக லோக்சபா சபாநாயகர் கூறுவது முழுப் பொய். பிரதமர் சபாநாயகருக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார். சபைக்கு வர அவருக்குத் துணிச்சல் இல்லாததால், சபாநாயகர் மூலம் அனைத்தையும் கூற வைக்கிறார். லோக்சபா எதிர்க்கட்சி தலைவரை ஏன் பேச அனுமதிக்கவில்லை?
பிரியங்கா லோக்சபா எம்.பி., காங்கிரஸ்
அதிகார வரம்பை திரும்பப்பெறுக!
எல்லையில் வேலி அமைக்க நிலம் வழங்குவதில், என் அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், எங்கள் மாநிலத்தில் பி.எஸ்.எப்., எனப்படும் எல்லைப் பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை, 15 கி.மீ.,லிருந்து, 50 கி.மீ., வரை விரிவுபடுத்தும் தன்னிச்சையான முடிவை மத்திய அரசு முதலில் திரும்பப் பெற வேண்டும்.
மம்தா பானர்ஜி மே. வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
ஓட்டுகளை நீக்க முயற்சி!
உ.பி.,யில் போலி ஆவணங்களின்படி, சிறுபான்மையினரின் ஓட்டுகளை நீக்க ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அச்சுறுத்தல் தரப்படுகிறது. படிவம் 7ஐ தவறாகப் பயன்படுத்தி, வாக்காளர்களின் பெயர்களை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை, உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி
