ராமர் கோவில் உண்டியல் காணிக்கை முறைகேடு
அயோத்தி ராமர் கோவில் உண்டியல் காணிக்கை முறைகேடு தொடர்பாக மௌனம் சாதிப்பது ஏன் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பக்தர்கள் தங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக உணரும் வேளையில், பிரதமர் மோடியோ பிற அமைச்சர்களோ எவ்வித கருத்தும் கூறாமல் அமைதியாக இருப்பது ஏமாற்றமளிப்பதாக கூறியுள்ளார்.
அயோத்தி ராமர் கோவிலில் காணிக்கை திருட்டு வழக்கு
அயோத்தி ராமர் கோவிலில் காணிக்கை கையாடல் செய்யப்பட்ட வழக்கில், உத்தரப்பிரதேச மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு உச்சநீதிமன்றத்தில் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது.
இந்த சம்பவத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணைக் குழு அமைக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வர நிலையில், சீல் வைத்த கவரில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
3 நாடுகளுக்கு குடியரசுத் தலைவர் அரசு முறை பயணம்
3 நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். இதன் மூலம் மால்டோவா மற்றும் வடக்கு மாசிடோனியா நாடுகளுக்கு செல்லும் முதல் இந்திய குடியரசுத் தலைவர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
அதேபோல் 30 ஆண்டுகளில் இந்திய ஜனாதிபதி ஒருவர் ருமேனியா செல்வதும் இதுவே முதல்முறையாகும்.
