டெல் அவிவ்: போர் காரணமாக மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றம் நிலவிவரும் நிலையில், பிரதமர் மோடி உடன் பேசியதாகவும், அவரது ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வருகிறது. இது தொடர்பாக நேற்று பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து இன்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். தற்போதைய சூழல் குறித்து இந்தியாவின் கவலையை தெரிவித்த பிரதமர், மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக நெதன்யாகு கூறியதாவது: எனது சிறந்த நண்பர் பிரதமர் மோடியுடன் பேசினேன். நீண்ட நேரம் அவருடன் பேசினேன். இஸ்ரேலுடனும், உண்மைக்காகவும், துணை நிற்பதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
