புதுடில்லி: நம் நாட்டுக்கு வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரதமர் நரேந்திர மோடியை மும்பையில் இன்று (பிப்ரவரி 17) சந்தித்து பேச்சு நடத்துகிறார்.
ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு வந்துள்ளார். இது அவரது நான்காவது இந்திய பயணம். இந்நிலையில், மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள லோக் பவனில், பிரதமர் மோடியை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இன்று சந்திக்கிறார்.
அப்போது, பாதுகாப்பு, தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. முக்கியமாக, பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து, ‘இந்தியா – பிரான்ஸ் இன்னோவேஷன் இயர் 2026’ என்ற நிகழ்ச்சியை, இரு தலைவர்களும் துவக்கி வைக்கின்றனர். 19ல், டில்லியில் நடக்கும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டிலும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பங்கேற்கிறார்.
