பிரதமர் மோடி இஸ்ரேல் பயணம்; இரு தரப்பு உறவில் புதிய கட்டம்

புதுடில்லி: பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம், இரு தரப்பு உறவில் ஒரு புதிய கட்டத்தை தொடங்கும் என்று இஸ்ரேலுக்கான இந்திய துாதர் ஜே.பி. சிங் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். 2017ம் ஆண்டிற்குப் பிறகு அவர் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் குறித்து இந்திய துாதர் ஜே.பி.சிங் தெரிவித்துள்ளதாவது:

இஸ்ரேல் பார்லிமென்டான நெஸட்டில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுவார்.

இரு நாடுகளின் நிதி அமைப்புகளை இணைத்தல், எல்லை தாண்டிய டிஜிட்டல் பணப்பரிமாற்ற உள்கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும்.செயற்கை நுண்ணறிவு (ஏஐ), சைபர் பாதுகாப்பு, குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற உயர்தொழில்நுட்பத் துறைகளில் இணைந்து செயல்படுவது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சு முன்னெடுக்கப்படும்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆகியோருடன் மோடி இருதரப்பு பேச்சு நடத்துவார்.

2017ம் ஆண்டு மோடி மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்திற்குப் பிறகு, 9 ஆண்டு கழித்து நடைபெறும் மிக முக்கியமான பயணமாகும்.இவ்வாறு ஜே.பி.சிங் தெரிவித்துள்ளார்.

Source link