பிரதமர் மோடி தமிழகம் வருகை மார்ச் 1ம் தேதிக்கு மாற்றம்

திருநெல்வேலி: பிரதமர் மோடியின் தமிழக வருகை பிப்ரவரி 28ம் தேதியில் இருந்து மார்ச் 1ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க., தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பா.ஜ., பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணி சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் ஜன., 23ல் பொதுக்கூட்டம் நடந்தது.

இதில், பிரதமர் மோடி பங்கேற்று, தேர்தல் பிரசாரத்தை துவக்கி வைத்தார். தற்போது பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்திற்கு வருகை தர இருக்கிறார். பிப்ரவரி 28ம் தேதி பிரதமர் மோடி வருகை தருவார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 06) நிருபர்களிடம் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், ”மதுரையில் பிப்.,28ம் தேதி நடைபெறவிருந்த பாஜ., பொது குழு கூட்டம், மார்ச் 1ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார்” என தெரிவித்தார்.

Source link