பிரதமர் மோடி தமிழகம் வருகை முதல் திமுக – காங். தொகுதிப் பங்கீடு பேச்சு வரை: இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்.,28)!

நமது நிருபர்

தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 28) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?

அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.

* இரண்டு நாள் பயணமாக இன்று பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். புதுச்சேரி மற்றும் மதுரையில் நாளை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

* விழுப்புரம் தைலாபுரத்தில் இன்று பாமக மாவட்ட செயலாளர்கள், வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் ஆலோசனைக்கு பிறகு யாருடன் கூட்டணி என்பதை ராமதாஸ் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

* தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவற்றுடன் திமுக இன்று பேச்சு நடத்துகிறது. மார்ச் 2ம் தேதி, கமலின் ம.நீ.ம., கட்சியுடன் பேச்சு நடக்கிறது.

* நாடு முழுவதும் 14 வயது சிறுமிகளுக்கு இலவச எச்பிவி (HPV) தடுப்பூசி போடும் திட்டத்தை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். நாட்டில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஒழிக்கும் வகையில், 14 வயது சிறுமிகளுக்கு Gardasil என்ற ஒருமுறை செலுத்தக்கூடிய எச்பிவி தடுப்பூசியை இலவசமாக செலுத்த மத்திய முடிவு செய்துள்ளது.

* டி20 உலகக்கோப்பை போட்டியில் இன்று இரவு 7 மணிக்கு இலங்கை, பல்லேகல மைதானத்தில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அரையிறுதியில் பாகிஸ்தான் நுழைய, அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறவது கட்டாயம் என்ற சூழல் ஏற்பட்டு உள்ளது.

Source link