சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, கன்னியாகுமரியில் வரும், 15ம் தேதி பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், 27 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் நாகர்கோவில், விளவங்கோடு, குளச்சல், பத்மநாபபுரம் ஆகிய நான்கு தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடுகிறது. வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், பா.ஜ., உட்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி வரும், 15ம் தேதி கன்னியாகுமரியில் பிரசாரம் செய்ய உள்ளார். மோடி பிரச்சார கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
கன்னியாகுமரியில் பிரசாரத்தை முடித்து கொண்டு, அன்றைய தினமே கோவையிலும் பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
