ஓ ய்வுகால மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேக மியூச்சுவல் பண்டு திட்டங்கள் நிறுத்தப்படும் என்ற செபியின் அறிவிப்பை மறுபரிசீலனை செய்யும்படி ‘ஆம்பி’ கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட செபி, தற்போது தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது.
மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், ‘சொல்யூஷன் ஓரியன்டடு பண்ட்ஸ்’ திட்டங்களையும் தொடரலாம் என செபி தெரிவித்துள்ளது. ஆனால் புதிய ‘லைப் சைக்கிள் பண்டு’ திட்டங்களை அறிமுகம் செய்யும்போது, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
செபியின் நிபந்தனைகள்
ஒரு நிறுவனம் பழைய ‘சில்ட்ரன்ஸ் பண்டை’ தொடர்ந்தால், அவர்களால் 20 ஆண்டு ‘லைப் சைக்கிள் பண்டை’ துவக்க முடியாது
பழைய ‘ரிடையர்மென்ட் பண்டை’ தொடர்ந்தால், 30 ஆண்டு ‘லைப் சைக்கிள் பண்டை’ துவக்க முடியாது
இரண்டையுமே தொடர விரும்பினால், அவர்களால் 20 மற்றும் 30 ஆண்டு திட்டங்களை துவங்க முடியாது. மற்ற 5, 10, 15 மற்றும் 25 ஆண்டு திட்டங்களை மட்டுமே நடத்த முடியும்
சில்ட்ரன்ஸ், ரிடையர்மென்ட் பண்டுகளை நிறுத்தினால் மட்டுமே, ஆறு வகையான (5, 10,15,20,25 மற்றும் 30 வருடம்) லைப் சைக்கிள் பண்டுகளையும் நடத்த முடியும்.
