பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

மூத்த பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே உடல்நலக்குறைவு காரணமாக தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.

92 வயதான ஆஷா போஸ்லேவுக்கு நேற்று மதியம் வீட்டில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டார்.

மருத்துவர்கள் அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஆஷா போஸ்லே காலமானார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மகாரஷ்டிராவின் சாங்கியில் 1933 ஆம் ஆண்டு பிறந்த ஆஷா போஸ்லே மறைந்த புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் சகோதரி ஆவார்.

70 ஆண்டுக்கு மேலாக ஆஷா போஸ்லே பல்வேறு மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.

2000ல் தாதா சாகேப் பால்க்கே விருதும், 2008ல் பத்மவிபூஷனும், இரு முறை தேசிய திரைப்பட விருதும் பெற்றவர் ஆஷா போஸ்லே.

தமிழில் ஹே ராம் படத்தில் வரும் ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ உள்பட இளையராஜா இசையில் பல்வேறு பாடல்களை ஆஷா போஸ்லே பாடியுள்ளார்.

Source link