லெஜண்ட் சரவணன், புதிதாக நடித்துள்ள படம் ‘லீடர்’. இப்படத்தை துரை செந்தில் குமார் இயக்கியுள்ளார். லெஜண்ட் சரவணனே தயாரித்துல் உள்ளார். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் நாயகியாக நடித்திருக்க ஷாம், ஆண்ட்ரியா ஜெரிமியா, ‘பாகுபலி’ பிரபாகர், சந்தோஷ் பிரதாப், ‘லியோ’ புகழ் பேபி இயல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இப்படம் தூத்துக்குடியை மையமாக வைத்து ஒரு உண்மை சம்பவ அடிப்படையில் ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ளது. சமீபத்தில் டைட்டில் லுக் மற்றும் டைட்டில் கிளிம்ஸ் ஆகியவற்றை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து சமீபத்தில் டீசரும் வெளியானது. இதுவரை வெளியான அனைத்திலுமே அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. மேலும் படத்திற்கு எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.
இப்படம் ஏப்ரல் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் திடீரென ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என மாற்றப்பட்டது. இதையடுத்து அண்மையில் மீண்டும் முதலில் திட்டமிட்டபடி ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட் வெளியாகியுள்ளது. நாளை(29.03.2026) சென்னையில் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளதாகவும் இசை வெளியீடை சேர்த்து ஆக்ஷன் டீசரும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸுக்கு தேதி இன்னும் குறைவான நாட்களே இருப்பதால் மூன்று நிகழ்ச்சியையும் லெஜண்ட் சரவணன் ஒரே நிகழ்ச்சியாக நடத்துவதாக கூறப்படுகிறது.
