பிராகு செஸ்: குகேஷ் 'டிரா'

பிராகு: பிராகு செஸ் தொடரின் 4வது சுற்று போட்டியை இந்தியாவின் குகேஷ் ‘டிரா’ செய்தார்.

செக்குடியரசில், பிராகு செஸ் தொடர் நடக்கிறது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில், ‘நடப்பு உலக சாம்பியன்’ இந்தியாவின் குகேஷ், ‘நடப்பு சாம்பியன்’ இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர்.

நான்காவது சுற்றில் இந்தியாவின் குகேஷ் (வெள்ளை), செக்குடியரசின் டேவிட் நவரா (கருப்பு) மோதினர். விறுவிறுப்பான இப்போட்டி 72வது நகர்த்தலில் ‘டிரா’ ஆனது.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் (கருப்பு), ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் (வெள்ளை) மோதினர். இதில் ஏமாற்றிய அரவிந்த் 29வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.

உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் அப்துசாட்டோரோவ் (கருப்பு), ஸ்பெயினின் டேவிட் ஆன்டன் (வெள்ளை) மோதிய போட்டி 41வது நகர்த்தலில் ‘டிரா’ ஆனது.

நான்கு சுற்றுகளின் முடிவில் நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரெஸ்ட் (3.0 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். அடுத்த இரு இடங்களை தலா 2.5 புள்ளிகளுடன் நாடிர்பெக் அப்துசாட்டோரோவ், டேவிட் நவரா, பகிர்ந்து கொண்டுள்ளனர். குகேஷ், அரவிந்த் உள்ளிட்ட 4 பேர், தலா 1.5 புள்ளிகளுடன் 7வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

சாலஞ்சர் பிரிவில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக், சூர்ய சேகர் கங்குலி, தங்களது 4வது சுற்று ஆட்டத்தை ‘டிரா’ செய்தனர்.

Source link