பிரான்ஸ் அதிபர், மலேசிய பிரதமர், ஓமன் சுல்தானுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: ஈரான் – இஸ்ரேல், அமெரிக்க போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பதற்றத்தைத் தணிப்பது, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்பது தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம், ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

இம்மானுவேல் மேக்ரோனுடனான தொலைபேசி உரையாடல் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘‘மேற்கு ஆசியாவின் சூழல் குறித்தும், பதற்றத்தைத் தணிப்பதன் அவசரத் தேவை குறித்தும், இதற்கு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக அணுகுமுறைக்கு திரும்புவது குறித்தும் எனது அன்பு நண்பர் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் பேசினேன்.

பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்காக எங்கள் நெருங்கிய ஒருங்கிணைப்பைத் தொடர ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

Source link