பிரெய்லி வசதியுடன் புதிய 'பாப்கார்டு' அறிமுகம்

பா ர்வையற்றோர் மற்றும் பார்வை குறைபாடுள்ளோர் எளிதாக பயன்படுத்தும் வகையில், பிரெய்லி வசதியுடன் கூடிய ‘பாப்கார்டு பிரீமியர்’ கிரெடிட் கார்டை, பேங்க் ஆப் பரோடாவின் துணை நிறுவனமான ‘பாப்கார்டு’ அறிமுகம் செய்துள்ளது.

இந்த கிரெடிட் கார்டில், தொட்டு உணரக்கூடிய வகையில் பிரெய்லி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, அட்டை வகை, கார்டு எண் மற்றும் காலாவதி தேதியை பார்வையற்றவர்கள் எளிதாக அடையாளம் காண முடியும். இதனால், அவர்கள் தினசரி பரிவர்த்தனைகளை அதிக நம்பிக்கையுடன் செய்ய முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கிரெடிட் கார்டில், பயணம், வெளிநாட்டு செலவுகள், உணவகங்கள் மற்றும் வாழ்க்கைமுறை செலவுகளுக்கு கூடுதல் ரிவார்டு பாயிண்டுகள் வழங்கப்படுகின்றன.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட உணவகங்களில் சலுகைகள் மற்றும் சில விமான நிலையங்களில் லவுஞ்ச் வசதிகளும் வழங்கப்படுகின்றன.

Source link