திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் பிறப்பிட அட்டை மசோதாவை, வருவாய் துறை அமைச்சர் கே.ராஜன் நேற்று அறிமுகம் செய்தார்.
அவர் கூறுகையில், ”குடியுரிமை, பிறப்பிடம் ஆகியவை வெவ்வேறு கருத்துகள். அரசியலமைப்பின் கீழ் குடியுரிமை உறுதி செய்யப் படுவது போல, ஒருவரை முறைப்படி கேரளத்தவர் என அங்கீகரிக்கும் சட்டப்பூர்வ ஆவண மாக இந்த மசோதா இருக்கும்.
”மத்திய பா.ஜ., அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருதலைபட்சமாக அமல்படுத்தியதே, இந்த மசோதாவை கொண்டு வருவதற்கு காரணம்,” என்றார். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ., ‘இது ஆபத்தான பிரிவினைவாத அரசியல்’ என விமர்சித்துள்ளது.
”அடையாளத்தை நிரூபிக்க மக்கள் சிரமப்படுவதை தவிர்க்கவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது,” என, முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்.
