பிற்பகல் 3 மணி நிலவரம்: புதுச்சேரியில் 72.40%, கேரளாவில் 62.71%, அசாமில் 75.91% வாக்குகள் பதிவு

புதுடெல்லி: பிற்பகல் 3 மணி நிலவரப்படி கேரளாவில் 62.71% வாக்குகளும், அசாமில் 75.91% வாக்குகளும், புதுச்சேரியில் 72.40% வாக்குகளும் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.

புதுச்சேரியில் 72.40% வாக்குகள் பதிவு: 30 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் 10 லட்சத்து 14 ஆயிரத்து 70 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இங்கு காலை 11 மணி நிலவரப்படி 37% வாக்குகளும், பகல் 1 மணி நிலவரப்படி 56.83% வாக்குகளும் பதிவாகின. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 72.40% வாக்குகள் பதிவாகின.

இங்கு என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் இந்த தேர்தலில் முக்கிய சக்திகளாகக் கருதப்படுகின்றன.

Source link