மத்திய கிழக்கு போர்ச் சூழலால் உலகளாவிய எண்ணெய் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய எண்ணெய், எரிவாயு போக்குவரத்து பாதையை ஈரான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால் உலக நாடுகளுக்கு செல்ல வேண்டிய சரக்கு கப்பல்கள் தடைபட்டு நின்றுள்ளன.
இந்நிலையில் எதிர்ப்பொருள் தட்டுப்பாட்டால் பிலிப்பைன்ஸ் அதிபர் போங்போங் மார்கோஸ், நாட்டில் எரிசக்தி அவசரநிலையை அறிவித்துள்ளார்.
தற்போது பிலிப்பைன்ஸில் 45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் மட்டுமே இருப்பில் உள்ளது. இதனை அதிகரிக்க, பல்வேறு நாடுகளிலிருந்து 10 லட்சம் பேரல் எண்ணெயை வாங்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த அவசரநிலை ஒரு ஆண்டு காலத்திற்கு அமலில் இருக்கும். இதன் மூலம், எரிபொருள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விரைவாகக் கொள்முதல் செய்ய அரசுக்கு கூடுதல் அதிகாரம் கிடைத்துள்ளது.
