தற்போதைய துணை முதல்வரான சாம்ராட் சவுத்ரி, நிதிஷ் குமாருக்குப் பிறகு பிஹாரின் அடுத்த முதல்வராகப் பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ள நபராகக் கருதப்படுகிறார். இது குறித்து பாஜகவின் தேசிய தலைமையைச் சந்திப்பதற்காக அவர் புதுடெல்லிக்குச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பத்தாவது முறையாக முதல்வராகப் பதவி வகித்த நிதிஷ் குமார், மார்ச் 30-ஆம் தேதியன்று பிஹார் சட்ட மேலவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். முன்னதாக, அவர் மார்ச் 17-ஆம் தேதியன்று நடைபெற்ற தேர்தலில், ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வானார்.
“பிஹார் சட்டப்பேரவையின் இரு அவைகளிலும், இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராகப் பணியாற்ற வேண்டும்” என்ற தனது நீண்டகால விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில், முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த பிறகு, மார்ச் 5-ஆம் தேதியன்று நிதிஷ் குமார் மாநிலங்களவைத் தேர்தலுக்கான தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
