புதுடில்லி: மத்திய அரசு, மின்சார துறை நிதி நிறுவனங்களான பி.எப்.சி., எனும் ‘பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்’, அதன் துணை நிறுவனமான ஆர்.இ.சி., ஆகியவற்றை ஒருங்கிணைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
“மின் உற்பத்தி, பரிமாற்றம், வினியோக திட்டங்களுக்கு முக்கிய நிதி ஆதாரமாக செயல் பட்டு வரும் பி.எப்.சி., -ஆர்.இ.சி., நிறுவனங்களை ஒருங்கிணைக்க அரசு பரிசீலித்து வருகிறது.
பொதுத்துறை நிதி நிறுவனங்களை வலுப்படுத்த, அரசு எடுத்து வரும் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இது மேற்கொள்ளப்படுகிறது, ” என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026-27 பட்ஜெட் உரையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட பின், ஞாயிறு நடைபெற்ற பங்கு சந்தை சிறப்பு வர்த்தக அமர்வில், இரு நிறுவனங்களின் பங்கு விலையும் ஆறு சதவீதம் வரை உயர்ந்தன.
இரு நிறுவனங்களும் ‘நவரத்னா’ மத்திய பொதுத்துறை நிறுவனங்கள்.
