பீலேவைவிட சிறந்த வீரர் மெஸ்ஸி * அதிபர் டிரம்ப் பாராட்டு

வாஷிங்டன்: ”கால்பந்து அரங்கில் பீலேவை விட சிறந்த வீரர் மெஸ்ஸி,” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டினார்.

அமெரிக்காவில் எம்.எஸ்.எஸ்., கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. மொத்தம் 30 அணிகள் பங்கேற்கின்றன. இதன் 2025 சீசனில் அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி இடம் பெற்ற, இன்டர் மயாமி அணி முதன் முறையாக சாம்பியன் ஆனது.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மெஸ்ஸி (2024, 2025) தொடரின் சிறந்த வீரராக தேர்வானார்.

நேற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இன்டர் மயாமி அணிக்கு பாராட்டு விழா நடந்தது. மெஸ்ஸி, லுாயிஸ் சாரஸ், அலெண்டே, ரோட்ரிகோ டி பால் உள்ளிட்ட அணியினர், பங்கேற்றனர்.

அப்போது மயாமி அணி ‘ஜெர்சியின்’ இளஞ்சிகப்பு நிறத்தினால் ஆன, கால்பந்து, டிரம்ப் பெயர் பொறித்த ‘ஜெர்சியை’, அதிபருக்கு வழங்கப்பட்டது.

டிரம்ப் கூறியது:

எம்.எல்.எஸ்., தொடரில் கோப்பை வெல்வது என்பது சாதாரண விஷயமல்ல. மிகவும் கடினமானது. மயாமி அணிக்கு மெஸ்ஸி வந்தார், வென்றார். இவர் மீது அதிக நெருக்கடி இருந்தது.

இருப்பினும் மெஸ்ஸி சாதிப்பார் என எதிர்பார்த்தேன். இதற்காக உங்களுக்கு நன்றி. ஏனெனில் நீங்கள் திறமையான, சிறந்த வீரர். இதற்கு முன் நியூயார்க் காஸ்மோஸ் அணிக்காக பிரேசில் ஜாம்பவான் பீலே, இங்கு விளையாடியுள்ளார். ஆனால், அவரை விட நீங்கள் சிறந்த வீரராக திகழ்கிறீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link