புதிய 'இன்சூரன்ஸ்' விதிமுறைகள் ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது

கா ப்பீட்டு துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க, ‘ஐ.ஆர்.டி.ஏ.ஐ.,’ புதிய கணக்கியல் விதிகளை அறிவித்துள்ளது. வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்துக் காப்பீட்டு நிறுவனங்களும், இந்த புதிய முறையை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதுவரை உள்நாட்டு முறையை பின்பற்றிய நிறுவனங்கள், இனி சர்வதேச தரத்திற்கு இணையான ‘இந்தியன் ஏ.எஸ்., 117’ முறைக்கு மாறுகின்றன.

இதனால், கமிஷன் மற்றும் லாப கணக்குகள் பாலிசி காலம் முழுதும் பிரித்து காட்டப்படும். இது, இந்திய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை இன்னும் நேர்மையாகவும், தெளிவா கவும் காட்ட உதவும்.

இந்த புதிய விதிமுறைகள் எல்.ஐ.சி., போன்ற ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், பொது காப்பீட்டு நிறுவனங்கள், மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என அனைத்திற்கும் பொருந்தும்.

நிபுணர்களின் கருத்து

“இந்த புதிய விதிமுறைகளால், பாலிசிதாரர்கள் எடுத்திருக்கும் பாலிசியின் வாயிலாக கிடைக்கும் நன்மைகளிலோ அல்லது பிரீமியத்திலோ எந்த மாற்றமும் இருக்காது.

“அதேபோல, பாலிசிதாரர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது. இன்சூரன்ஸ் நிறுவனத்தின் லாபம் மற்றும் நிதி நிலையை முதலீட்டாளர்களும், பொதுமக்களும் மிக தெளிவாக தெரிந்துகொள்ளலாம்,”.

இவ்வாறு அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Source link