தமிழகத்தில் புதிய சிறைத் துறை டிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் நியமனம் செயப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேனியில் 17 கைதிகள் தப்பிய விவகாரத்தில் தமிழக அரசு அதிரடி உத்தவுட்டுள்ளது.
தேனி மாவட்ட கிளைச் சிறையில் இருந்து 17 கைதிகள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியதாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் 17 கைதிகளையும் போலீசார் தனிப்படை அமைத்து கைது செய்த நிலையில், இன்று கைதிகள் தப்பியதன் எதிரொலியாக சிறைத் துறை டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவருக்கு பதிலாக புதிய சிறைத் துறை டிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் அவர்களை நியமித்து, தமிழக அரசு உத்திவுட்டுள்ளது. மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்தும் தமிழக அரசு உத்திரவுட்டுள்ளது.
ஏன் இந்த அதிரடி மாற்றம்
தேனியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 17 கைதிகள் ஒரே நேரத்தில், சிறைச் சாலையில் இருந்த காவலர்களை தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த விவகராம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சட்ட ஒழங்கை பாதுகாக்க தவறிய முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, தற்போது சிறைத் சாலையில் இருக்கும் கைதிகளை கூட ஒழுங்காக வைத்திருக்க முடிவில்லை எனவும், மக்கள் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக் குறியாகி வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினர்.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் (TANGEDCO) தலைவர்
இந்த சூழலில் தேனியில் 17 கைதிகள் தப்பியதையும், முன்னதாக புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் என தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கைதிகள் சீறார் கூர் நோக்கு இல்லங்கள் என மொத்தம் 50 பேர் தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதனை காரம் காட்டியே தமிழக சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், டான்ஜெட்கோ ஊழல் தடுப்பு ஆணையத்தின் (TANGEDCO) தலைவராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
தென்காசி SP மாற்றம்
தென்காசி மாவட்ட காவல் கண்கானிப்பாளராக பணியாற்றி வந்த S.அசோக் குமார் Anti – Terrorism Squad, Madurai-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக Economic Offences Wing North Zone-ல் இருந்த இளம் IPS அதிகாரியான Dr. R. ஸ்டாலின் IPS தென்காசியில் மாவட்ட காவல் கண்கானிப்பளாராக நியமித்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.
Source link
