பட்டினப்பாக்கத்தில் அமைக்க இருந்த புதிய தலைமைச் செயலகம் விவகாரத்தை அம்பலடுத்திய RTI , முதல்வர் விஜய் மீது திமுக எம்பி கனிமொழி விமர்சனம்
புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்ததற்கான ஆய்வு விவரங்கள் தங்களிடம் இல்லை என்று RTI மூலம் எழுப்பிய கேள்விக்கு தவெக அரசு பதிலளித்திருக்கிறது. இதுகுறித்து கேள்வி எழுப்பிய திமுக எம்பி கனிமொழி , முதல்வர் விஜய் மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
கனிமொழி அறிக்கை
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க இடம் தேர்வு செய்ததற்கான ஆய்வு விவரங்கள் தங்களிடம் இல்லை தவெக அரசு பதிலளித்திருக்கிறது. அப்படியென்றால், இடத்தைத் தேர்வு செய்தது யார் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இடத்தை தேர்வு செய்தது முதலமைச்சர் விஜய் அவர்களா? இல்லை ஜோதிடரா? தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா? என கடுமையான விமர்சனத்தை முன்வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்
கடந்த ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது. இந்தச் சூழலில் கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி விதி எண் 110-ன் கீழ், முதல்வர் விஜய் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதில், சென்னையில் ரூ.1200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
அரசாணை வெளியீடு
முதல்வர் அறிவித்த ஒரே வாரத்தில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என அரசு ஆணை வெளியிட்டது.
எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
இந்த ஆணை வெளிவந்தது முதல் பல அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பட்டினப்பாக்கம் கடும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி எனவும், குறுகிய சாலை வசதிகள் கொண்ட இடம் எனவும், மேலும் பள்ளிகள் நிறைந்த பகுதி எனவும் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். முக்கியமாக பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்படும் புதிய தலைமைச் செயலகத்தில் பூர்வகுடி மக்களான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனப் போர்க்கொடி தூக்கினர்.
முதல்வர் விஜய்க்கு எச்சரிக்கை
மேலும் தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்த இடதுசாரிகள் மீனவர்களுடன் இணைந்து போராட்டங்கள் நடத்தினர். மேலும் பட்டினப்பாத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை அரசு திரும்ப பெறவில்லை என்றால் எங்கள் ஆதரவு முடிவில் மாற்றம் ஏற்படும் என முதல்வர் விஜய்க்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Source link
