புதிய தொழிலாளர் சட்டங்கள் இன்று முதல் அமல்

இவை கடந்த ஆண்​டு, நவ.21-ம் தேதி முதல் அமலுக்கு வந்​துள்​ளன. இதை பெரும்​பாலான நிறு​வனங்​கள் உடனடி​யாக அமல்​படுத்​த​வில்​லை. இன்று தொடங்​கும் புதிய நிதி​யாண்​டில் இருந்து அமல்​படுத்​துகின்​றன. இந்த புதிய சட்​டத்​தில், தொழிலா​ளரின் மொத்த ஊதி​யத்​தில், அதாவது நிறு​வனத்​தின்

வருங்​கால வைப்பு நிதி மற்​றும் ஓய்​வூ​திய நிதி பங்​களிப்​பு, விடுப்​புக்கு ஈடாக பணம் பெறு​தலுக்​கான பங்​களிப்பு உள்ளிட்டஅனைத்​தும் சேர்த்த மொத்த ஊதி​யத்​தில் அல்​லது மொத்தசிடிசி​யில் (CTC) 50 சதவீதத்தைஅடிப்​படை ஊதி​யமாக கணக்கிட வேண்​டும் என்ற முக்​கிய அம்​சம் இடம்​பெற்​றுள்​ளது.

இவ்​வாறு நிறு​வனங்​கள் அடிப்​படை ஊதி​யத்தை நிர்​ண​யிக்​கும்​போதும், தொழிலா​ளர்​களின் வருங்​கால வைப்பு நிதி சேமிப்​பும், அதற்கு இணை​யாக நிறு​வனத்​தின் பங்​களிப்​பும் அதி​கரிக்​கும். அதன் பயனாக வருங்​கால வைப்பு நிதி ஓய்​வூ​தி​யம் அதி​க​மாக கிடைக்க வாய்ப்​புள்​ளது. மேலும் விடுப்​புக்கு ஈடாக பணமாக பெறும் தொகை​யும் அதி​க​மாகும். மேலும் ஓய்​வு​பெறும்​போது பணிக்​கொடை​யும் அதி​க​மாக கிடைக்​கும்.

Source link