புதிய நீதி கட்சி அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்

அதிமுக – பாஜக கூட்டணியில் மதுரை மத்திய தொகுதி கிடைத்ததும் தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவோம் என நினைத்திருந்த நிலையில் சென்னையை சேர்ந்த இயக்குநர் சுந்தர் சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அதிருப்தியடைந்து கட்சியிலிருந்து வெளியேறியுள்ளார். இவரை தொடர்ந்து இவரது ஆதரவாளர்கள் பலரும் கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இது குறித்து கட்சியினர் கூறுகையில், “வ.உ.சி சிலை அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிறகு மதுரைக்கு பிரதமர் மோடியை ஏ.சி.சண்முகத்துடன் சென்று வழக்கறிஞர் கார்த்தியும் நேரில் சந்தித்துள்ளார். அப்போது அவரை மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் என பிரதமரிடம் ஏ.சி.சண்முகம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இவர் பெயர் தான் வேட்பாளர் பட்டியலில் முதலில் இருந்துள்ளது. இந்நிலையில் கார்த்திக்கு பதிலாக சுந்தர்.சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கார்த்திக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிருப்திடைந்துள்ளனர்” என்றனர்.

Source link