மியூச்சுவல் பண்டு துறையில் புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், ‘கிப்ட் பி.பி.ஐ.,’ முறையை அறிமுகம் செய்ய செபி பரிந்துரைத்துள்ளது. இதன்படி, ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி, கிப்ட் கார்டை பெற்று, அதை மற்றவர்களுக்கு பரிசளிக்கலாம். அந்த பரிசை பெறுபவர், சம்பந்தப்பட்ட மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின் இணையதளத்தில் அதனை முதலீடாக மாற்றிக் கொள்ளலாம். இந்த கிப்ட் கார்டு திட்டத்தை பற்றி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்க ஏப்ரல் 14, 2026 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
* ஒரு கிப்ட் கார்டின் அதிகபட்ச மதிப்பு ரூ.10,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
* ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.50,000 வரை முதலீடு செய்யலாம்
* பணமோசடியை தவிர்க்க, கிப்ட் கார்டு வாங்குபவரின் கே.ஒய்.சி., விவரங்கள் முறையாக பராமரிக்கப்படும்
* ப ரிசை பெறுபவர் தனது பெயரில் அந்த கார்டை பதிவு செய்த பின்னரே, முதலீடு செய்ய முடியும்
* கிப்ட் கார்டுகள் வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டு மட்டுமே செல்லுபடியாகும்
* ஓராண்டுக்குள் பயன்படுத்தாவிட்டால், பணம் வழங்கியவருக்கே திருப்பி தரப்படும்
* கிப்ட் கார்டுகளை வெளியிடுவதற்கான கட்டணங்களை மியூச்சுவல் பண்டு நிறுவனங்களே ஏற்கும்.
